search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மெட்ரோ"

    • பாராளுமன்ற தேர்தலன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்.
    • காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் என அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25-ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

    தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இதற்கிடையே, வரும் 25-ம் தேதி தலைநகர் டெல்லியில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் அன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

    • கருப்பு உடை அணிந்த பெண் மெட்ரோ ரெயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் சர்ச்சையான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே மெட்ரோவில் அத்துமீறிய பயணிகள், அரைகுறை ஆடையுடன் பயணம் செய்த பயணிகள்.

    ஜோடிகளின் முத்தமழை, பயணிகள் இடையே சண்டை என பல வீடியோக்கள் வைரலாகி இருந்த நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு ஆணின் மடியில் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக அமரும் காட்சிகள் உள்ளது.

    கருப்பு உடை அணிந்த அந்த பெண் மெட்ரோ ரெயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. அப்போது யாரும் தனக்கு இருக்கை வழங்காத நிலையில், அந்த பெண் ஒரு வாலிபரிடம் தனக்கு அமர இருக்கை தருமாறு கேட்கிறார். அதற்கு அந்த வாலிபர் மறுத்தார். உடனே அந்த பெண் வாலிபரின் மடியில் அமர்ந்து கொள்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • உயிரிழந்தவர் காரவால் நகரைச் சேர்ந்த வினோத் குமார்.
    • படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரெயில் நிலையத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இன்று காலை 11 மணியளவில் உயரமான ரெயில் நிலைய மேடையின் எல்லைச் சுவர் இடிந்து கீழே சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் உயிரிழந்தவர் காரவால் நகரைச் சேர்ந்த வினோத் குமார் (53) என்பது தெரியவந்தது.

    இரு சக்கர வாகனத்தில் சென்ற காசியாபாத் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தார். 

    மோனு, சந்தீப் மற்றும் முகமது தாசிர் ஆகிய மூவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தை தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் - ஒரு மேலாளர் மற்றும் ஒரு ஜூனியர் இன்ஜினியர் - இடைநீக்கம் செய்யப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    • குடியரசு தின விழாவன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்.
    • காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் என அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

    இந்நிலையில், குடியரசு தின விழாவன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

    • சமீப காலமாக இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்புக்கு பலியாகி வருகின்றனர்.
    • டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பால் இறந்தார்.

    புதுடெல்லி:

    கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்புகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. சமீப காலங்களில் மாரடைப்புக்கு இளைஞர்கள் அதிக அளவில் பலியாகி வருகின்றனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், தலைநகரில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பல்லப்கரில் இருந்து காஷ்மீர் கேட் வரை பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான சிக்கலால் ரயிலில் சரிந்து விழுந்தார்.

    திடீரென மயங்கி விழுந்த அவருக்கு மற்றொரு பயணி முதலுதவி சிகிச்சை அளித்தார். டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள மூல்சந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விசாரணையில், அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வசித்து வந்த மயங்க கர்க் என்பதும், மகாராஷ்டிராவின் வார்தாவில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு தேர்வுக்காக பஞ்ச்குலாவுக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    டெல்லி மெட்ரோ ரெயிலில் 26 வயது டாக்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லி பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.
    • செப்டம்பர் 8 முதல் 10 வரை அதிகாலை 4 மணி முதல் டெல்லி மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது.

    மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. 28 அடி உயரம், 21 அடி அகலம், 25 டன் எடை கொண்ட இந்த சிலை ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஜி20 மாநாட்டை முன்னிட்டு தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை போர் விமானங்கள் உள்பட வான்வழியிலான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜி20 மாநாடு நடைபெறும் செப்டம்பர் 8 முதல் 10 வரை அதிகாலை 4 மணி முதல் ரெயில் சேவை

    தொடங்கும் என டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது.

    காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின்படி இயங்கும் என தெரிவித்துள்ளது.

    வழக்கமாக அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் மெட்ரோ ரெயில் சேவை ஜி20 மாநாட்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணி முதல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டு
    • கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும்

    ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக டெல்லி மெட்ரோ ரெயில் இன்று கூடுதலாக 106 முறை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில், பயணிகளின் கூடுதல் நெரிசலைப் பூர்த்தி செய்ய கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) பணியாளர்களும் நிலையங்களில் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேவைப்பட்டால், கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்க, டிஎம்ஆர்சி டிராவல் மொபைல் செயலியைப் பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பயணிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் முக்கிய மெட்ரோ நிலையங்களில் காவலர்கள் மற்றும் வாடிக்கையாளர் வசதி முகவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழியை்த தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை.
    • மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

    டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கைள எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்தது. திருத்தப்பட்ட பட்டியலின்படி, ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது" என்று கூறியது.

    மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மெட்ரோவில் மர்ம நபர் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல்.
    • டெல்லி மெட்ரோவுக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    டெல்லி மெட்ரோ ரயிலில் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி காவல் துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், நபர் ஒருவர் மெட்ரோ ரெயிலில் அமர்ந்து கொண்டு தனது கைப்பேசி திரையை பார்த்துக் கொண்டே ஆபாச செய்கையில் ஈடுபடும் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மர்ம நபரின் ஆபாச செய்கையை பார்த்து, ரயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் முகம் சுளித்தனர்.

    "டெல்லி மெட்ரோவில் மர்ம நபர் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வைரல் வீடியோவை பார்த்தேன். அது மிகவும் அறுவறுப்பாக இருக்கிறது. இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்ட நபர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்," என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    • டெல்லியின் ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் டிரோன் ஒன்று விழுந்தது.
    • இதனால் ஏற்பட்ட பரபரப்பால் அந்த ரெயில் நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ஜசோலா விஹார் மெட்ரோ ரெயில்நிலைய தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. இதனால் அந்தப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த போலீசார் டிரோனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்று மருந்து பொருட்களை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்த போலீசார், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

    இந்தப் பரபரப்பால் ஜசோலா விஹார் ரெயில் நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது. அதன்பின், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #DelhiMetro
    புதுடெல்லி: 

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
     
    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதேபோல், பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை முதல் டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், ரெயில் நிலையங்களில் சந்தேகத்துக்கு உரிய விதத்தில் பொருட்கள் கிடந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #DelhiMetro
    அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் நொய்டாவுக்கு பயணம் மேற்கொண்டனர். #SouthKorea #PMModi
    புதுடெல்லி:

    தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதனை அடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாம்சங் செல்போன் உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மூன் ஜே-இன் ஆகிய இருவரும் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒன்றாக நொய்டா சென்றடைந்தனர். 
    ×